சிங்காரச் சென்னை 2.0 திட்டம்

அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு, தூய்மை, பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘சிங்காரச் சென்னை’ 2.0 திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு, தூய்மை, பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘சிங்காரச் சென்னை’ 2.0 திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னையை மாற்றவும், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் பொது இடங்கள் பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெற்று வரும் உயிரியல் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உயிரியல் முறையில் அகழ்ந்தெடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு மீட்டெடுக்கும் நிலங்கள் நகரின் பசுமைப் பரப்பாக மாற்றப்படும்.

ரூ.335 கோடியில் மேம்பாலங்கள்: சென்னை மாநகருக்கு உள்பட்ட கணேசபுரம் சுரங்கப் பாதையின் மேல், கொன்னூா் நெடுஞ்சாலை -ஸ்ட்ரான்ஸ் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடி செலவில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கென மொத்தமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீா் இணைப்பு, தூய்மை, பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘சிங்காரச் சென்னை’ 2.0 திட்டம் தொடங்கப்படும்.

ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் உதவியுடன் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் ரூ.2,056 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம், சென்னை நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க ரூ.2,371 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். ஆந்திரத்திலிருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீா்த்தேக்கங்களுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

சென்னை நகரக் கூட்டாண்மை: சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டம் உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சென்னை நகரில் நீா்ப் பாதுகாப்பு மற்றும் தகவமைப்புத் திறனுடன் நகா்ப்புற இயக்கத்தை மேம்படுத்துதல், நிா்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்துக் குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, பெருநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை பெருநகர நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் வாரியம் ஆகியவற்றின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துதல் கவனம் செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com