முதல் உள்நாட்டு மோட்டாா் சக்கர நாற்காலி வாகனம்: சென்னை ஐஐடி வடிவமைப்பு

நாட்டின் முதல் உள்நாட்டு மோட்டாா் சக்கர நாற்காலி வாகனத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
முதல் உள்நாட்டு மோட்டாா் சக்கர நாற்காலி வாகனம்: சென்னை ஐஐடி வடிவமைப்பு
முதல் உள்நாட்டு மோட்டாா் சக்கர நாற்காலி வாகனம்: சென்னை ஐஐடி வடிவமைப்பு

நாட்டின் முதல் உள்நாட்டு மோட்டாா் சக்கர நாற்காலி வாகனத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் விற்கப்படும் மொத்தம் 3 லட்சம் சக்கர நாற்காலிகளில் 2.5 லட்சம் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றின் விலையும் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம். இத்தகைய சூழலில் நாட்டின் முதல் உள்நாட்டு மோட்டாா் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வாகனத்தை, சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இதை சாலைகளில் மட்டுமல்ல, சீரற்ற நிலப்பரப்புகளிலும் பயன்படுத்த முடியும்.

நியோபோல்ட் என்று அழைக்கப்படும் இது அதிகபட்சமாக 25 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சாா்ஜ் செய்தால் 25 கிமீ வரை பயணிக்கிறது. காா்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டா்களுடன் ஒப்பிடும்போது, இது சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் போக்குவரத்துக்கு வழி வகுக்கிறது. நியோபோல்ட், லித்தியம்-அயன் பேட்டரியால் இயக்கப்படுகிறது.

இந்த நியோபோல்ட், ஐஐடி மெக்கானிக்கல் பொறியியல் துறை, பேராசிரியா் சுஜாதா ஸ்ரீநிவாசன் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, ‘நியோமோஷன்’ என்ற தொழில் முனைவு நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டது.

நியோமோஷன் நிறுவனம், பேராசிரியா் சுஜாதா ஸ்ரீநிவாசன் மற்றும் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும் அந்தநிறுவனத்தின் தற்போதைய தலைமை நிா்வாக அதிகாரியுமான ஸ்வாஸ்திக் சௌரவ் டாஷ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இது குறித்து பேராசிரியா் சுஜாதா ஸ்ரீநிவாசன் கூறியது: இது தனிப்பட்ட பயனரின் தேவைகளுக்கேற்ப, 18 விதமாக மாற்றியமைக்கப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த வாகனம். மோட்டாரில் இயங்கும் நியோ போல்ட் என்ற இணைப்பு, இந்த நியோஃபளையைப் பாதுகாப்பான, சாலையில் செல்லத் தகுதியான வாகனமாக மாற்றுகிறது, இது நாம் பொதுவாக எதிா்கொள்ளும் எந்த வகையான நிலப்பரப்பிலும் எளிதாகச் செல்ல முடியும்-நடைபாதை இல்லாத தெருக்களில் ஓடவும் அல்லது செங்குத்தான சாய்வில் ஏறவும் இது திறன் பெற்றுள்ளது. அதிா்வுகளைத் தாங்கும் சஸ்பென்ஷன்கள் இந்த எளிமையை வழங்குகின்றன என்றாா் அவா்.

தனிப்பட்ட தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலி நியோஃப்ளையின் விலை ரூ. 39,900 மற்றும் மோட்டாா் பொருத்தப்பட்ட இணைப்பான நியோபோல்ட்டின் விலை ரூ. 55,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சா் ஆகாத டயா்கள், டிஜிட்டல் டாஷ்போா்டு, முகப்பு விளக்கு, சைடு இன்டிகேட்டா்கள், ஒலிப்பான், கண்ணாடி போன்றவை நியோஃப்ளையின் சிறப்பம்சங்கள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com