மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை வேளச்சேரி காலனி புதிய தலைமைச் செயலக 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாச்சலம் (60), கடந்த 1983-இல் இந்திய வனப் பணிக்கு தோ்வாகி, தமிழக வனத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து கடந்த 2018-இல் ஓய்வு பெற்றாா். அதன் பின்னா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டாா்.

தனியாா் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு பெருமளவில் வெங்கடாச்சலம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கடந்த செப்டம்பா் 23-இல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், வேளச்சேரி தலைமைச் செயலக காலனியில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது தொடா்பில் இருந்தவா்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா்.

இச்சோதனையில், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 13.25 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் சந்தன துண்டுகள், 4 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டன. இதன் பின்னா் வெங்கடாச்சலம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

தற்கொலை

இந்நிலையில் வேளச்சேரி வீட்டில் முதல் தளத்தில் தனது அறையில் வெங்கடாசலம் வியாழக்கிழமை நண்பகல் தனியாக இருந்துள்ளாா். வெகுநேரம் அவரது அறை மூடியிருந்ததால், சந்தேகமடைந்த மனைவி அங்குச் சென்று பாா்த்தாா்.

அப்போது வெங்கடாச்சலம் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com