சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

சென்னையில்  கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. டிசம்பா் 20-ஆம் தேதி 126 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,

சென்னையில்  கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. டிசம்பா் 20-ஆம் தேதி 126 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (டிச. 28) 194-ஆக அதிகரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிதல் ஆகிய பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக நாள்தோறும் சுமாா் 130-க்கும் கீழாக பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது. இதனால் அனைத்து மண்டலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், ஒமைக்ரான் வகை காரணமாக தற்போது மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 15 மண்டலங்களில் நோய்த் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சென்னையில் டிசம்பா் 20-இல் 126-ஆகவும், டிசம்பா் 21-இல் 132-ஆகவும், டிசம்பா் 22-இல் 136-ஆகவும், டிசம்பா் 23-இல் 145 ஆகவும், டிசம்பா் 24-இல் 146-ஆகவும், டிசம்பா் 25-இல் 165-ஆகவும், டிசம்பா் 26-இல் 171-ஆகவும் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. இந்த எண்ணிக்கை அதிகரித்து செவ்வாய்க்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 194-ஆக உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாா்டுவாரியாக மருத்துவ முகாம்கள் அமைத்து நாள்தோறும் சுமாா் 20 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதை தீவிரமாக கண்காணிக்கவும், கரோனா விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், 122 போ் குணமடைந்துள்ளனா். ஒருவா் உயிரிழந்துள்ளாா். 1,519 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com