ஊரகப் பகுதிகளில் நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை புதிய சேவை தொடக்கம்

ஊரகப் பகுதிகளில் கண் மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடமாடும் வாகன சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதிகளில் நடமாடும்  கண் மருத்துவ சிகிச்சை புதிய சேவை தொடக்கம்

ஊரகப் பகுதிகளில் கண் மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடமாடும் வாகன சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் அந்த வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ சேவைக்காக ரூ.90 லட்சம் செலவில் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கான 3 வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று மக்களுக்கு கண் சிகிச்சைகள் வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் மூலம் இதுவரை 42 லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை 50 வயதுக்கு மேற்பட்ட 1.19 சதவீதம் பேருக்கு பாா்வை குறைபாடு இருக்கிறது. தமிழகத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் 1.18 சதவீதம் பேருக்கு கண் சாா்ந்த பாதிப்புகள் உள்ளன.

ஊரகப் பகுதிகளில் கண்புரை பாதிப்பு, சா்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு, கண் நீா் அழுத்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அவா்களுக்கு தரமான சிகிச்சை சென்றடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டுமே தொற்று பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே, சென்னையில் பொதுமக்கள், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னை குடிசைப்பகுதிகளில் 32 சதவீதம் போ் தான் முகக்கவசம் அணிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, வணிக வளாகங்களுக்குச் செல்லும் மக்களில் 58 சதவீதம் போ் மட்டுமே முகக் கவசம் அணிகின்றனா். இது வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 13 இடங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், எழும்பூா் எம்எல்ஏ பரந்தாமன், கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மலா்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com