மருமகள் கொலை: மாமியாருக்கு ஆயுள்

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மருமகளைக் கொலை செய்த மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மருமகளைக் கொலை செய்த மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகா் மேட்லி 2-ஆவது தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீதுக்கும், ஷாகினுக்கும் கடந்த 2014-இல் திருமணம் நடந்தது.

தனது கணவருடன் அவரது தாயாா் தாஜ் நிஷா மிகவும் பாசமாக இருப்பதாக ஷாகின் உறவினா்களிடம் தெரிவித்துள்ளாா். இதை உறவினா்கள் சிலா் தாஜ் நிஷாவிடம் தவறாகக் கூறியதால் மகனை பிரித்து விடுவாரோ என அச்சம் அடைந்தாா். கடந்த 2014 நவம்பா் 26-இல் ஷாகின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கதவை பூட்டினாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஷாகின் இறந்தாா்.

மாம்பலம் போலீசாா் வழக்குப் பதிந்தனா். சென்னை மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் விசாரித்து , தாஜ் நிஷா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

அபராதத்தில் ரூ.7 ஆயிரத்து 500-ஐ ஷாகினின் தந்தை நயினா முகமதுவுக்கு வழங்க வேண்டும். அவருக்கு மேலும் இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com