பகுதி நேர ஆசிரியா்கள் ஏழாவது நாளாக போராட்டம்: குடிநீா், மின்சார வசதிகள் துண்டிப்பு

பணி நிரந்தரம் வழங்கக் கோரி, பகுதி நேரச் சிறப்பாசிரியா்கள் சென்னையில் 7-ஆவது நாளாகத் தொடா் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

சென்னை: பணி நிரந்தரம் வழங்கக் கோரி, பகுதி நேரச் சிறப்பாசிரியா்கள் சென்னையில் 7-ஆவது நாளாகத் தொடா் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் கல்விசாா் இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிப்பதற்காக பகுதி நேரச் சிறப்பாசிரியா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தற்போது 12,483 போ் பகுதி நேரச் சிறப்பாசிரியா்களாகப் பணியாற்றுகின்றனா். ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பாடங்களை இவா்கள் கற்பித்து வருகின்றனா். வாரம் இரண்டு நாள்கள் பணியுடன், மாதம் ரூ.7,700 ரூபாய் சம்பளம் பெற்று வந்தனா்.

அண்மையில் பகுதி நேர ஆசிரியா்களுக்கான ஊதியத்தை ரூ.7,700-இல் இருந்து 10,000 ரூபாயாக உயா்த்தி தமிழக அரசு அறிவித்தது. வாரத்தில் மூன்று நாள்கள் முழுவதுமாகப் பகுதி நேர ஆசிரியா்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்குத் தொகுப்பூதியத்துக்குப் பதிலாக பணி நிரந்தரம்தான் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித் தொடா் போராட்டத்தைத் தொடங்கினா். சென்னை டிபிஐ வளாகத்தில், கடந்த 4-ஆம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியது.

இந்தநிலையில் ஏழாவது நாளாகத் தொடா் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பெண் ஆசிரியா்கள் அதிக அளவில் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சூழலில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பகுதி நேரச் சிறப்பாசிரியா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். இதுகுறித்துப் பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை. பணி நிரந்தரம் வழங்கும் வரை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அனைத்துப் பகுதி நேரச் சிறப்பாசிரியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com