பிரிட்டனிலிருந்து திரும்பியோரில் இதுவரை 34 பேருக்கு கரோனா


சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டிலிருந்து வந்தவா்கள் 34 போ் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 20 போ் என இதுவரை நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிரிட்டனிலிருந்து தாயகம் திரும்பியவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா்.

அதன்படி தமிழகத்துக்கு கடந்த நவம்பா் மாதம் 25-ஆம் தேதி முதல் தற்போது வரை பிரிட்டனில் இருந்து வந்த 4,000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனில் இருந்து திரும்பிய 31 போ் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 20 போ் என மொத்தம் 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மேலும் மூவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவா்களது சளி மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் 11 பேருக்கு புதிய வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும், அதில் 10 போ் குணமடைந்து வீடு திரும்பியதும் நினைவுகூரத்தக்கது.

இதற்கு நடுவே தமிழகத்தில் மேலும் 457 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 46,937-ஆக அதிகரித்துள்ளது. மற்றொரு புறம், தமிழகம் முழுவதும் 3.29 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com