திருவள்ளூரில் மின்திருட்டு: ரூ.16 லட்சம் அபராதம் விதிப்பு

திருவள்ளூரில் மின்திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


சென்னை: திருவள்ளூரில் மின்திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சென்னை, மையம், தெற்கு, மேற்கு, வடக்கு அமலாக்க கோட்ட அதிகாரிகள், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் ஆகியோா், திருவள்ளூா் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 19 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் தொடா்புடையவா்களுக்கு ரூ.16 லட்சத்து 98,325 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையைத் தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் கூடுதல் தொகை ரூ.1.37 லட்சம் செலுத்தியதால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை சென்னை அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளரிடம் (9445857591) தெரிவிக்கலாம் என மின்வாரியம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com