கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது உயா்நீதிமன்றம்

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சந்திரகுமாா் தாக்கல் செய்த மனுவில், இலங்கைத் தமிழரான நான் பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை உண்ணாவிரதம் இருந்தேன். இதனால் என் மீது பூந்தமல்லி போலீஸாா் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த போலீஸாா் குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது. இந்திய தண்டனைச் சட்டம் 309-ன் கீழ் (தற்கொலை முயற்சி) மனுதாரா் மீது குற்றம்சாட்டி போலீஸாா் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா். இந்த குற்றத்துக்கு அதிகபட்சமே ஓராண்டு சிறை தண்டனைதான். எனவே இந்த குற்றப்பத்திரிகையை ஓராண்டுக்குள் விசாரணைக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால் பூந்தமல்லி நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்குப் பின்னா் எந்தவொரு காரணமும் கூறாமல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com