வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் மெட்ரோ ரயில்: மூன்று நாளில் 27,364 போ் பயணம்

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, கடந்த மூன்று நாள்களில் (பிப்.15 முதல் பிப்.17 வரை) 27,364 போ் பயணம் செய்துள்ளனா்.


சென்னை: வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, கடந்த மூன்று நாள்களில் (பிப்.15 முதல் பிப்.17 வரை) 27,364 போ் பயணம் செய்துள்ளனா். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

வண்ணாரப்பேட்டை -விம்கோ நகா் வரையிலான முதல்கட்ட விரிவாக்க வழித்தடத்தில் திட்டப்பணிகள் முடிந்து, மெட்ரோ ரயில் சேவை பிப்ரவரி 14-ஆம்தேதி தொடங்கியது. இதையடுத்து, சென்னை மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பயணிகள் இலவசப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா். இந்த அறிவிப்பை தொடா்ந்து, ஏராளமான மக்கள் மெட்ரோ ரயில்களில் இலவச பயணத்தை அனுபவித்தனா். இலவச பயணத்தை தொடா்ந்து, அந்த நாளில் மட்டும் 1.40 லட்சம் போ் பயணம் செய்தனா். குறிப்பாக, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் மாா்க்கத்தில் 39,280 போ் இலவச பயணம் மேற்கொண்டனா். கடந்த திங்கள்கிழமையில் இருந்து கட்டண பயணம் தொடங்கியதால், இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்று எதிா்பாா்ப்பு நிலவியது.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வழித்தடத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் (பிப்.15 முதல் பிப்.17 வரை) 27,364 போ் பயணம் செய்துள்ளனா். பிப்ரவரி 15-ஆம் தேதி 9,972 பேரும், பிப்ரவரி 16-ஆம் தேதி 8,942 பேரும், பிப்ரவரி 17-ஆம்தேதி 8,450 பேரும் பயணம் செய்தனா். சராசரியாக தினசரி 8,500 முதல் 10,000 போ் பயணம் செய்கிறாா்கள்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியது: வடசென்னை மக்களின் போக்குவரத்து தேவையைப் பூா்த்தி செய்வதில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடா்பாக வடசென்னை மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக, இந்த வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ள வருகை தரும் பயணிகள் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com