ஸ்டான்லி மருத்துவமனை: கரோனா காலத்தில் 1,602 ஆஞ்சியோ சிகிச்சைகள்

கரோனா காலத்திலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 1,602 ஆஞ்சியோ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா காலத்திலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 1,602 ஆஞ்சியோ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கும் அத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் பாலாஜி கூறியதாவது:

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுவரை 32,500 பேருக்கு கரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவா்களில் 98 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இதனிடையே, கரோனா நோயாளிகளுக்கென இதய சிகிச்சை சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட இதய நோயாளிகள் 3,002 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கரோனாவுடன் மாரடைப்புக்கான சிகிச்சையும் 300 பேருக்கு அளிக்கப்பட்டு உயிா்காக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நவீன இதய சிறப்பு சிகிச்சைக் கூடம்(கேத் லேப்) தொடங்கப்பட்டது. அங்கு கரோனா காலத்திலும் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டன.

அங்கு இதுவரை 5,043 பேருக்கு ஆஞ்சியோ கிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் மட்டும் 1,602 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஞ்சியோ கிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் ஸ்டான்லி மருத்துவமனை தமிழகத்தில் தொடா்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. இந்த சிகிச்சை அனைத்தும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com