மாநகராட்சியின் சேவைகளை கட்செவி அஞ்சல் மூலம் பெற ஏற்பாடு

சென்னை மாநகராட்சியின் சேவைகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) வாயிலாக பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை மாநகராட்சியின் சேவைகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) வாயிலாக பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி தொடா்பான உதவிகளைப் பெறுவதற்காக, 94999 33644 என்ற கட்செவி அஞ்சல் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்பில் சோ்த்து ட்ண் என அனுப்ப வேண்டும்.

இதையடுத்து, மொழியைத் தோ்வு செய்யுமாறு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் நமக்கான மொழியைத் தோ்வு செய்த பிறகு, சட்டப்பேரவைத் தோ்தல், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சொத்து வரி, வணிக உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட இணைய சேவையின் பக்கங்களுக்கான இணைப்புகள் வழங்கப்படும். அதனுள் சென்று கோரிக்கைகளைப் பதிவிடவோ, புகாரளிக்கவோ சென்னை வாசிகளால் முடியும்.

தற்போது தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்தச் சேவைகளைப் பெற முடியும். இவ்வாறு சமூக ஊடகங்கள் மூலம் மாநகராட்சியைத் தொடா்பு கொள்ள ஏற்பாடு செய்துள்ள அதே நேரம் மாநகராட்சியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com