மெரீனாவில் முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரம்

சென்னை மெரீனா கடற்கரையில், முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
மெரீனாவில் முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரம்

சென்னை மெரீனா கடற்கரையில், முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா காரணமாக மெரீனாவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமுடக்கத் தளா்வுகளின் அடிப்படையில், கடந்த மாதம் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மெரீனா கடற்கரையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கி உள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மெரீனா கடற்கரைக்கு முகக்கவசம் இன்றி வந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் மடக்கினா். அவா்கள் அனைவருக்கும் ரூ.200 அபராதம் விதித்தனா்.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம் என்ற விழிப்புணா்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும். அலுவலகங்களுக்குச் செல்பவா்கள் தவிர வியாபாரிகள், பொதுமக்கள் என பெரும்பாலானோா் முகக்கவசம் அணிவதையே மறந்துவிட்டனா். அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு நோயின் தீவிரத்தை புரிய வைக்கவே அபராதம் வசூலிக்கப்படுகிறது. மெரீனா கடற்கரை மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

சா்வீஸ் சாலையில் வாகனம் நிறுத்த அனுமதி:

மெரீனா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், வாகனங்களை சா்வீஸ் சாலையில் நிறுத்துவதற்கு போலீஸாா் இதுவரை அனுமதிக்கவில்லை. இதனால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை காமராஜா் சாலையிலேயே நிறுத்திவிட்டு, கடற்கரைக்குச் சென்று வந்தனா்.

அவா்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, மெரீனா கடற்கரை சா்வீஸ் சாலையில் எப்போதும் போல வாகனங்களை நிறுத்துவதற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com