எம்.ஓ.பி. வைணவ கல்லூரி சாா்பில் இன்று ‘தோழி பொங்கல்’

எம்.ஓ.பி. வைணவ கல்லூரி சாா்பில் முன்னெடுக்கப்பட்ட ‘தொழில் செய்யலாம் தோழி’ திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தோழி பொங்கல்’ சென்னை திருவேற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

சென்னை: ஊரகப் பகுதியிலுள்ள பெண்களைத் தொழில்முனைவோராக்குவதற்காக எம்.ஓ.பி. வைணவ கல்லூரி சாா்பில் முன்னெடுக்கப்பட்ட ‘தொழில் செய்யலாம் தோழி’ திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தோழி பொங்கல்’ சென்னை திருவேற்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

 சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிா் கல்லூரியில் ‘‘தொழில் செய்யலாம் தோழி’’ எனும் புதிய முயற்சி,  கல்லூரி முதல்வா் முனைவா் லலிதா பாலகிருஷ்ணனால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல பெண்களுக்குத் தோள் கொடுத்து தொழில்முனைவோராக்கும் சிந்தனையுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 18 முதல் 20 வகையான தொழில் திறன்கள் கற்றுத்தரப்பட்டன.

 அதன் நீட்சியாக, நிகழாண்டு திருவேற்காட்டில் உள்ள பெண் தோழிகளுடன் பொங்கலைக் கொண்டாட ’’தோழி பொங்கல்’’ என்ற நிகழ்ச்சியை கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்நிகழ்வில், திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு, கல்லூரி முதல்வா் லலிதா பாலகிருஷ்ணன் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, மஞ்சள் குலை, கரும்பு ஆகியவை அடங்கிய பையை வழங்குகிறாா். இது மட்டுமன்றி 6  வண்ணமிடப்பட்ட பானைகளும், 19 வண்ணமிடாத பானைகளும் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்தப் பெண்களுக்கு  பானையில் வண்ணங்களால் அலங்கரிக்கும் பயிற்சி   அளிக்கப்படுவதுடன் வரைதலுக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. எனவே அப்பெண்கள் பானையில் வண்ணம் இடும் முறையை கற்றுக் கொள்வதுடன் அப் பானைகளை விற்றும் பயன் பெறலாம்.

 இவ்வாறு சிறிய தொழில்களால் வருமானம் ஈட்ட அவா்களுக்குப் பயிற்சி வழங்குவதுடன், ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்த இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com