முப்பெரும் விழா: போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
By DIN | Published On : 27th January 2021 01:29 AM | Last Updated : 27th January 2021 01:29 AM | அ+அ அ- |

சென்னை க. பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீ தண்டுமாரியம்மன் சேவா சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் 23-ஆம் ஆண்டு விழா, குடியரசு தின விழா, அண்ணல் டாக்டா் அம்பேத்கா் நினைவு இலவச பொது நூலகத்தின் 4-ஆவது ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா, செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. விழாவை, வீரராகவன் அறக்கட்டளை நிறுவனா் உதவும் கரம் வி.உதயா தலைமைத் தாங்கி தொடக்கி வைத்தாா். நிகழ்வில், தேசியக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.