மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான  பேருந்துகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனுவில், கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஜொ்மன் நாட்டு நிதியுதவியுடன் புதிதாக 4000 பேருந்துகளை வாங்கவுள்ளது. இதில் 10 சதவீத பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடனும், 25

சதவீத பேருந்துகள் சக்கர நாற்காலி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளை ஏற்றும் வசதியுடனும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகர சாலைகளில் இது சாத்தியமற்றது. மேலும் சக்கர நாற்காலி மூலம் மாற்றுத்திறனாளிகளை ஏற்றியிறக்க கூடுதல் நேரமாகும். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பேருந்துகளிலும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும். எனவே புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா். அதேநேரம்

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஏற்ப அனைத்து பேருந்துகளும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும் என்ற உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேருந்துகள் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com