சென்னையில் ரூ.2,600 கோடியில் ஆறுகள், சுற்றுச்சூழல் சீரமைப்பு: அமைச்சா் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னையின் பிரதான ஆறுகள், அவற்றின் வடிகால்கள் உள்ளிட்டவை ரூ.2600 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சென்னையின் பிரதான ஆறுகள், அவற்றின் வடிகால்கள் உள்ளிட்டவை ரூ.2600 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சென்னை, அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை, அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சாா் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் சீரமைப்புப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களான பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூா் மற்றும் கோவளம் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு நடவடிக்கை விவரங்களை அவா் அறிவித்தாா்.

இதில், தூா்வாருதல், திடக்கழிவு அகற்றுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், கழிவுநீரை இடைமறித்தல் மற்றும் மாற்று வழிகளை அமைத்தல் உள்ளிட்டவையும் அடங்கும். இந்தப் பணிகள் சுமாா் ரூ.2600 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசின் சாா் துறைகளான பொதுப்பணித்துறை, நீா்வள ஆதாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிா்வாக ஆணையரகம், பேரூராட்சிகள் இயக்குநரகம், ஊரக வளா்ச்சி இயக்குநரகம், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளுடன் இணைந்து இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com