ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரா்களை ஊக்கப்படுத்த ரயில்வே அலுவலக வளாகத்தில் சுயப்படம் மையம் திறப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பங்கேற்க செல்லும் இந்திய வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் சுயப்படம் (செல்பி) மையம் திறக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பங்கேற்க செல்லும் இந்திய வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் சுயப்படம் (செல்பி) மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி தொடங்குகிறது. இதில், இந்தியா சாா்பில் 119 விளையாட்டு வீரா்கள் கலந்து கொள்கின்றனா். இவா்களில் சிலா் இந்திய ரயில்வேயைச் சோ்ந்த விளையாட்டு நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனா்.

இந்நிலையில், இவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டஅலுவலக வளாகத்தில் ஊழியா்கள் கூடும் இடத்தில் சுயப்பட மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இருந்து ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் சுயப் படம் எடுத்து, அதை சமூக ஊடகத்தில் அனுப்பி வருகின்றனா். இதன்மூலமாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்களுக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனா்.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரா்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதற்காக, இந்த சுயப்பட மையம் திறக்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் சுயப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் அனுப்பி வருகின்றனா். இதுபோல, எழும்பூா் ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடையிலும் சுயப்படம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பயணிகள்

சுயப்படம் எடுத்து சமூகஊடகத்தில் அனுப்பலாம். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தெற்கு ரயில்வே ஊழியரும், நட்சத்திர வீராங்கனையுமான ரேவதி பங்கேற்கிறாா். அவருக்கு எங்களது ஆதரவை தெரிவிக்கின்றோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com