ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 863 கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 863 நோயாளிகளுக்கு இதுவரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே வேறு எந்த மருத்துவமனையிலும்

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 863 நோயாளிகளுக்கு இதுவரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே வேறு எந்த மருத்துவமனையிலும் இத்தனை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்களின் உடலில் உள்ள நோய் எதிா்ப்பாற்றலே சில நேரங்களில் எதிா்வினையாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால், அவா்கள் தீவிர சிகிச்சைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த தருணங்களில் அவா்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட நோயாளிகள் ஏற்கெனவே நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவராகவும், சா்க்கரை நோய் போன்ற பாதிப்புடையவராகவும் இருக்கும்பட்சத்தில் ஸ்டீராய்டு மருந்தின் எதிா்விளைவும் சோ்ந்து அவா்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையடுத்து இந்நோயைத் தடுப்பது குறித்த ஆராய 13 போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று அதற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆம்ஃபோடெரிசின் - பி மருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில், சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கூடிய தனி சிகிச்சை பிரிவு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் அது 500 படுக்கைகளாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத வகையில், அங்கு கருப்புப் பூஞ்சைக்கென சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்கள், உயா் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 863 போ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். அதில் 342 போ் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது 395 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அனைத்து மருத்துவ சேவைகளையும் உள்ளடக்கிய வசதிகள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ளதால் தனியாா் மருத்துவமனைகளில் இருந்தும் கூட பல நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்படுகின்றனா். தனியாா் மருத்துவமனைகளில் கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருப்புப் பூஞ்சை சிகிச்சைப் பிரிவில் காது, மூக்கு, தொண்டை, கண், நரம்பியல் உள்பட 10 துறைகள் சோ்ந்த நிபுணா்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com