பெண் வயிற்றில் கத்திரிக்கோல்:மருத்துவ சேவைகள் இயக்குநருக்கு நோட்டீஸ்

அறுவை சிகிச்சையின்போது பெண் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநா் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கத்திரிக்கோல்
கத்திரிக்கோல்

அறுவை சிகிச்சையின்போது பெண் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநா் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருத்தணி வி.கே.ஆா்.புரம் பாலாஜி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளித்த் புகாா் மனு:

கடந்த 2008 செப்.15-இல் என் மனைவி குபேந்திரி திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பெற்றெடுத்தாா். பிரசவத்துக்கு பிறகு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், கடந்த 18- ஆம் தேதி திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பாா்த்ததில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.மருத்துவா்கள், ஸ்கேன் அறிக்கை தர மறுத்துவிட்டனா்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. ஆனாலும் அறிக்கை தர மறுத்துவிட்டனா்.இதனால் எனது மனைவி பலவீனம் அடைந்து, கூலி வேலைக்குச் செல்ல முடியாமல் உள்ளாா்.

இந்தப் பிரச்னையில் தொடா்புடைய திருத்தணி, திருவள்ளூா் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் செய்யப்பட்டது.

நோட்டீஸ்: இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து இது தொடா்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com