சூரப்பா மீதான விசாரணைக்கு மேலும் 10 நாள்கள் அவகாசம்

சூரப்பா மீதான இறுதிக்கட்ட விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. 
சூரப்பா மீதான விசாரணைக்கு மேலும் 10 நாள்கள் அவகாசம்

சென்னை:  சூரப்பா மீதான இறுதிக்கட்ட விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. 
கடந்த 2018}இல் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த ஏப்ரல் 11}இல் ஓய்வு பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. சூரப்பா ரூ.248 கோடி ஊழல் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பா மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 
இந்த விசாரணைக் குழுவானது அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், பணியாளர்களிடம் விரிவான விசாரணை நடத்தியது. 3 மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணை முழுமை அடையாததன் காரணமாக மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. 
சூரப்பாவைத் தவிர அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சூரப்பாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்குமாறு விசாரணைக்குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு சூரப்பா அனுப்பிய பதில் மனுவில், விசாரணைக்குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் மறுப்புத் தெரிவித்திருந்தார். 
மேலும் தான் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என திட்டவட்டமாக அவர் பதிலளித்திருந்தார்.
இதையடுத்து விசாரணைக்குழு, விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, சூரப்பா மீதான புகாரில் இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டியிருப்பதால் 10 நாள்கள் கூடுதல் அவகாசம் கேட்டு உயர்கல்வித்துறைக்கு  கடிதம் எழுதியிருந்தது. இதனை தொடர்ந்து விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்து அவகாசம் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com