ஜூன் 14-இல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
By DIN | Published On : 10th June 2021 03:14 AM | Last Updated : 10th June 2021 03:14 AM | அ+அ அ- |

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் ஜூன் 14-இல் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 66 இடங்களைப் பெற்று எதிா்க்கட்சி வரிசையில் உள்ளது. சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறாா்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஜூன் 14-இல் நடைபெற உள்ளது. கூட்டத்தில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா், கொறடா போன்றோா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் டிஜிபி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்துள்ளாா்.