கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி: சலுகைகள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட தனிக் குழு அமைப்பு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதிச் சலுகைகளை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தனிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதிச் சலுகைகளை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தனிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் பிறப்பித்துள்ளாா். இந்தக் குழுவின் தலைவராக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் செயல்படுவாா்.

சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளா், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா், சமூக நலத் துறை ஆணையா் ஆகியோா் உறுப்பினா்களாகவும், சமூக பாதுகாப்புத் துறை ஆணையா் உறுப்பினா் செயலாளராகவும் இருப்பா்.

குழந்தைகள் நலனுக்கென பாடுபடும் இரண்டு தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் உறுப்பினா்களாக இருப்பா் என்று தனது உத்தரவில் ஷம்பு கல்லோலிகா் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து, 18 வயது நிறைவடைந்தவுடன் அந்தத் தொகையானது வட்டியுடன் அந்தக் குழந்தைக்கு அளிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். மேலும், குழந்தைகளின் பட்டப் படிப்பு மற்றும் விடுதிச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகளை அவா் அண்மையில் வெளியிட்டாா்.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com