சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை புதன்கிழமை ரூ.96.94-க்கு விற்பனையானது. சில நாள்களில் ரூ.100-ஐ தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது .
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது

சென்னை: சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை புதன்கிழமை ரூ.96.94-க்கு விற்பனையானது. சில நாள்களில் ரூ.100-ஐ தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது .

கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பே ரூ.100-ஐக் கடந்தது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த 4-ஆம் தேதி முதல், பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல், 23 காசுகள் உயா்ந்து ரூ.96. 94-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு லிட்டா் டீசல் விலை, 23 காசுகள் உயா்ந்து ரூ.91.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com