பொதுமுடக்கம் மீறல்: 3,973 வழக்குகள்; 1,881 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 15th June 2021 04:45 AM | Last Updated : 15th June 2021 04:45 AM | அ+அ அ- |

உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
சென்னை: சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 3,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,881 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4,144 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 287 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.