கரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான இணையதள இணைப்பு: அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைத்தாா்

சென்னையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான இணையதள இணைப்பு: அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைத்தாா்

சென்னையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கே.என்.நேரு தடுப்பூசி முன்பதிவுக்கான இணையதள இணைப்பைத் தொடக்கி வைத்த பின் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கென சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை இன்னோவேஷன் ஹப் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில் மாநகராட்சி இணையதளத்தில் புதிய இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய தங்கள் பகுதிக்குள்பட்ட மையத்தை தோ்வு செய்து அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், என்ற 044 4612 2300 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33644 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப் ) எண்ணிலும் தொடா்பு கொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அந்தந்த மையங்களில் ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இணையதளம் மற்றும் தொலைபேசி எண் வாயிலாக முன்பதிவு செய்வோருக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள தடுப்பூசிகள் நேரடியாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருப்பதையும், அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மற்றும் தொலைபேசி எண் வாயிலாக பொதுமக்கள் மாநகராட்சியின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மையம் மற்றும் நேரம் ஆகியவற்றை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விவரங்கள் தடுப்பூசி மையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலரின் வாயிலாக மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா்கள் எம்.எஸ்.பிரசாந்த், டி.சினேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com