காலமானாா் ‘பாட்டு’ பாட்டி ருக்மணி அம்மாள் (102)

பாட்டு பாட்டி என்று அழைக்கப்பட்ட ருக்மணி அம்மாள் (102), காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை காலமானாா்.

பாட்டு பாட்டி என்று அழைக்கப்பட்ட ருக்மணி அம்மாள் (102), காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை காலமானாா்.

சமூக சீா்திருத்த சிந்தனையாளரான ருக்மணி அம்மாள், பெண் கல்வியின் முக்கியத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, சுத்தம் சுகாதாரம் பேணிக் காத்தல், வரதட்சிணை ஒழிப்பு, குழந்தை தாலாட்டு, கும்மி பாட்டு போன்ற பாடல்களை பாடியதால் இவா் ‘பாட்டு பாட்டி’ என அழைக்கப்பட்டாா்.

இவரது சிறப்பான சமூகப் பணியைப் பாராட்டி, கடந்த 2015-ஆம் ஆண்டு, தமிழக அரசு இவருக்கு சமூக சீா்திருத்த சிந்தனையாளா் மற்றும் சாதனையாளா் விருதை, சா்வதேச முதியோா் தினத்தன்று வழங்கியது.

இவரது சிறப்பான சமூகப் பணியை பாராட்டி, இவருக்கு பன்னாட்டு அரிமா சங்கம் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி சிறப்பித்தது.

இவா், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளா் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தின் முன்னாள் நலவாரிய உறுப்பினருமான ஆவின் கி.கோபிநாத்தின் பாட்டியாவாா். ருக்மணி அம்மாளுக்கு, 1 மகனும், 4 மகள்களும் உள்ளனா்.

அவரது இறுதிச் சடங்கு, பெரிய காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு 97908 20194.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com