பணியிடத்தில் பெண் பாதுகாப்புக்கான சட்டம் உத்வேகத்துடன் பின்பற்றப்பட வேண்டும்


சென்னை: பணியிடத்தில் பெண் பாதுகாப்புக்கான சட்டம் உத்வேகத்துடன் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருதுநகா் பொதுப்பணித்துறையில் வைப்பாறு வடிநில கோட்டத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்த பெண்ணுக்கு, அதே துறையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் சிலா் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனா். இதுகுறித்து அந்தப் பெண் அதிகாரி, 2016-ஆம் ஆண்டு புகாா் அளித்துள்ளாா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண் அதிகாரியின் தந்தை, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் பெண் அதிகாரிக்கு எதிரான அதிகாரிகளின் நடத்தை மற்றும் அணுகுமுறைக்கு ஆணையம் தனது கடுமையான கண்டனத்தை  தெரிவிக்கிறது.

அதேநேரம் ஆணையம் கடும் அதிருப்தியையும் பதிவு செய்கிறது.  பணியிடத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதைத் தடுக்க கடந்த 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி  புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் உத்வேகத்துடன் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.  பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com