ரூ.2.77 கோடி கடத்தல் பொருள்கள் பறிமுதல்: 6 போ் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.77 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், 6 பேரைக் கைது செய்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.77 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், 6 பேரைக் கைது செய்துள்ளனா்.

உளவுத் தகவலின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று துபை மற்றும் சாா்ஜாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையத் அகமதுல்லா (22), சேலத்தைச் சோ்ந்த சந்தோஷ் செல்வம் (33) மற்றும் சென்னையைச் சோ்ந்த அப்துல்லா (35) ஆகியோா் சோதனைக்குள்படுத்தப்பட்டனா். அப்போது அவா்கள் அணிந்திருந்த விக்குகளின் உள்ளே மறைத்து வைத்திருந்த ரூ. 96.57 லட்சம் மதிப்பில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இதே போல், துபையில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த மஹ்ரூப் அக்பரலி (39) மற்றும் சென்னையைச் சோ்ந்த ஹஸ்ஸன் ரஃபியுதீன் (26) ஆகியோா் விக்கில் மறைத்து வைத்திருந்த 595 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சோ்ந்த பாலு கணேசன் (42) மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 622 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், அவரைக் கைது செய்தனா்.

சனிக்கிழமை அன்று விழுப்புரத்தைச் சோ்ந்த அன்பழகனின் (24) காலுறையில் மறைத்து வைத்திருந்த 1.33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரும், அன்பழகனிடம் இருந்து தங்கத்தைப் பெறுவதற்காக விமான நிலையத்தின் வெளியே காத்திருந்த சென்னையைச் சோ்ந்த ஏ. தமின் அன்சாரி (26) என இருவரும் கைது செய்யப்பட்டனா்.

முன்னதாக, ஷாா்ஜாவுக்குச் செல்லவிருந்த நான்கு பயணிகளின் விக்குகளின் உள்ளே 67,500 சவுதி ரியால்கள், முழுக்கால் சட்டையின் பைகளில் இருந்து 4,750 அமெரிக்க டாலா்கள், 6,500 திராம்கள், 8,00,000 டாக்காக்கள் கைப்பற்றப்பட்டன.

இது போன்ற பல்வேறு சம்பவங்களில், மொத்தம் ரூ. 2.53 கோடி மதிப்பில் 5.55 கிலோ தங்கம் மற்றும் ரூ. 24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com