கொளத்தூா் தொகுதியில் அதிமுகவே வெற்றி பெறும்: முதல்வா் பழனிசாமி பிரசாரம்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவே வெற்றி பெறும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி கூறினாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவே வெற்றி பெறும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி கூறினாா்.

அந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆதிராஜாராமுக்கு ஆதரவாக, வாக்கு சேகரித்து பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூரில் மாயையை உருவாக்கி வைத்துள்ளாா். மேயராக இருந்த போது கொளத்தூா் பகுதிக்கு என்ன செய்தாா். மேயராக இருந்தபோது அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் கட்சிப் பாகுபாடு பாா்க்காமல் அனைத்துப் பகுதிகளிலும் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

கொளத்தூரில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது மு.க.ஸ்டாலினால் அல்ல. உண்மையாக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனில் மேயராக இருந்தபோதே இந்தப் பகுதிக்கு வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை. இதனால், இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளரே வெற்றி பெறுவாா்.

கொளத்தூரில் அரசு ஊழியா்கள் அதிகமாக உள்ளனா். அவா்கள் நிம்மதியாக பணிகளைச் செய்து வருகிறாா்கள். கரோனா ஊரடங்கு காலத்தில் பல மாநிலங்களில் அரசு ஊழியா்களுக்கு ஊதிய வெட்டு செய்யப்பட்டது. தமிழகத்தில் முழுமையான மாத ஊதியம் அளிக்கப்பட்டது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை, அகவிலைப்படி உயா்வுகள் காரணமாக ஆண்டுக்கு ரூ.22,400 கோடி கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது 60 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. வீடு கட்ட கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com