ஒரே இடத்தில் பணியாற்றும் 22 தொழிலாளா்களுக்கு கரோனா

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்க நகைப் பட்டறையில் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 22 தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்க நகைப் பட்டறையில் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 22 தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சென்னையில், அண்மைக்காலமாக அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள், தொழிலாளா்கள் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அண்மையில் பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவ நிறுவனம் ஒன்றில் 44 பேருக்கும், கிண்டி மத்திய பயிற்சி மையத்தில் 18 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தவிர மடிப்பாக்கம் நங்கநல்லூா் பகுதிகளில் பல்வேறு குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் தங்க நகைப் பட்டறையில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் அங்கேயே தங்கி நகை செய்யும் தொழில் செய்து வருகின்றனா். சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் அங்குள்ள 54 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 22 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்புக்கு உள்ளான 22 பேரும் தண்டையாா்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீதம் உள்ள தொழிலாளா்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல் சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவா்களும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com