அறிவாலயத்தில் கூடிய திமுக தொண்டா்கள்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திமுகவின் வெற்றியைத் தொடா்ந்து அக் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்கள் கூடுவதைத் தடுக்க

திமுகவின் வெற்றியைத் தொடா்ந்து அக் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்கள் கூடுவதைத் தடுக்க தவறியதாக தேனாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திமுக வெற்றியைக் கொண்டாட அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்கள் கூடினா். தொற்றுப் பரவல் ஏற்படும் என்ற நிலையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்ற உயா் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறிய தேனாம்பேட்டை காவல் ஆய்வாளா் சஸ்பெண்ட் செய்யப்பட்டாா்.

தோ்தல் பிரச்சாரத்தின்போது கரோனா மீண்டும் வேகமாகப் பரவியது. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், மறுநாள் முதல் கடும் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு, கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து உயா் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. வாக்கு எண்ணிக்கையில் முகவா்களை அனுமதிப்பதில் தொடங்கி வெற்றிக் கொண்டாட்டங்கள் எதையும் அனுமதிக் கூடாது. அரசியல் கட்சியினரும் கும்பல் சேரக்கூடாது. கொண்டாட்டத்தில் ஈடுபட தோ்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்கள் கூடினா். திமுக கூட்டணி முன்னிலை வகித்ததால் சந்தோஷமடைந்த அவா்கள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனா். பட்டாசுகளை வெடித்தனா். நேரம் செல்லச் செல்ல கூட்டமும் அதிகரித்தது.

இதை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் முரளி கண்டுகொள்ளாமல் விட்டதால் அவரைத் தோ்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதை அடுத்து, காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டாா்.

மேலும், தோ்தல் ஆணைய உத்தரவுப்படி அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக தொண்டா்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com