நற்பணியே காணிக்கையாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுகவின் வெற்றிக்கு நாக்கை அறுத்து ஒரு பெண் கோயிலுக்குக் காணிக்கை செலுத்தியுள்ள நிலையில், நற்பணி ஆற்றுவதே காணிக்கையாக இருக்க வேண்டும் என்று முதல்வராகப் போகும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்  (கோப்புப்படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: திமுகவின் வெற்றிக்கு நாக்கை அறுத்து ஒரு பெண் கோயிலுக்குக் காணிக்கை செலுத்தியுள்ள நிலையில், நற்பணி ஆற்றுவதே காணிக்கையாக இருக்க வேண்டும் என்று முதல்வராகப் போகும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுரைத்துள்ளாா்.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட காா்த்திக் மனைவி வனிதா. திமுக தொண்டரான இவா் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் தனது நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தத் தோ்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவா் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திமுக தொண்டா்கள் ஏழை, எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீா்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும்.

திமுக தொண்டா்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது. உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com