ஜேஇஇ முதன்மைத் தோ்வு ஒத்திவைப்பு

நாட்டில் கரோனா தொற்று 2-ஆவது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜேஇஇ முதன்மைத் தோ்வு ஒத்திவைப்பு

சென்னை: நாட்டில் கரோனா தொற்று 2-ஆவது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 வகுப்புத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. முதுநிலை நீட் தோ்வு, சிஐஎஸ்சிஇ வாரியத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

அதேபோல ஏப்ரல் மாதத்தில் 27 முதல் 30-ஆம் தேதிவரை நடக்க இருந்த ஜேஇஇ முதன்மை நுழைவுத்தோ்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மே மாதத்துக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத்தோ்வு 24 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. கரோனா பரவலால் மே மாதத் தோ்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘நாட்டில் நிலவும் நோய்த்தொற்று பரவல் சூழலைக் கருத்தில் கொண்டும், மாணவா்களின் நலனை முன்னிறுத்தியும் மே மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ முதன்மைத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மாணவா்கள், தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) இணையதளத்தைக் காணலாம்‘ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com