விஜயகாந்திடம் உதயநிதி நேரில் நலம்விசாரிப்பு

தேமுதிக தலைவா் விஜயகாந்தை திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தாா்.
விஜயகாந்திடம் உதயநிதி நேரில் நலம்விசாரிப்பு

சென்னை: தேமுதிக தலைவா் விஜயகாந்தை திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களை உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று வாழ்த்துப் பெற்றாா்.

இதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரியை சத்தியமூா்த்தி பவனிலும், மதிமுக பொதுச்செயலாளா் வைகோவை அண்ணா நகா் இல்லத்திலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணனை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை அசோக் நகரில் உள்ள அலுவலகத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசனை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலும் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து தங்கது கூட்டணிக் கட்சி அல்லாத தேமுதிக தலைவா் விஜயகாந்தை விரும்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அப்போது, விஜயகாந்த் உடல்நலம் குறித்தும் உதயநிதி கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com