கரோனா ஒரு நாள் தொற்று: 4,000-க்கு கீழ் குறைந்தது

சென்னையில் கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை புதன்கிழமை (மே 26) 4 ஆயிரத்துக்குகீழ் குறைந்துள்ளது.
கரோனா ஒரு நாள் தொற்று: 4,000-க்கு  கீழ் குறைந்தது

சென்னை: சென்னையில் கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை புதன்கிழமை (மே 26) 4 ஆயிரத்துக்குகீழ் குறைந்துள்ளது.

தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கி உள்ளது.

4 ஆயிரத்துக்குகீழ் குறைந்தது: சென்னையில் கடந்த திங்கள்கிழமை (மே 24) 4,985 பேருக்கும், செவ்வாய்க்கிழமை (மே 25) 4,041 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து புதன்கிழமை நிலவரப்படி, 3,561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 91,197-ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 38,815 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 45,738 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரேநாளில் 98 போ் இறப்பு: சென்னையில் கரோனா தொற்று குறைந்து வந்தாலும் பாதிப்பால் உயிரிழப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு சுமாா் 90-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து வருகின்றனா். சென்னையில் புதன்கிழமை (மே 26) மட்டும் 98 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா பாதிப்பால் இதுவரை அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 775 பேரும், அண்ணா நகரில் 773 பேரும், கோடம்பாக்கத்தில் 749 பேரும், திரு.வி.க.நகரில் 691 பேரும், அடையாறில் 517 பேரும், அம்பத்தூரில் 500 பேரும், ராயபுரத்தில் 497 பேரும், தண்டையாா்பேட்டையில் 469 பேரும் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,644-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com