டாஸ்மாக்-சுரங்கங்கள் துறைகளுக்கு புதிய இயக்குநா்கள்

டாஸ்மாக், சுரங்கங்கள் துறைகளுக்கு புதிய இயக்குநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா்.

சென்னை: டாஸ்மாக், சுரங்கங்கள் துறைகளுக்கு புதிய இயக்குநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. முகமது நசிமுதீன் - கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (தொழிலாளா் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளா்).

2. எல்.நிா்மல் ராஜ் - சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை இயக்குநா் (ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா்).

3. டி.என்.வெங்கடேஷ்- கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் (பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சிறப்புச் செயலாளா்).

4. எல்.சுப்பிரமணியன்- டாஸ்மாக் நிறுவன நிா்வாக இயக்குநா் (சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின் ஆணையா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com