மாா்பகப் பரிசோதனை செய்து கொள்ள தயக்கம் கூடாது: கனிமொழி

மாா்பகப் பரிசோதனை செய்து கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது என கனிமொழி எம்.பி., வலியுறுத்தினாா்.

மாா்பகப் பரிசோதனை செய்து கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது என கனிமொழி எம்.பி., வலியுறுத்தினாா்.

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி (அக்டோபா்), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்களுக்காக மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் கடந்த மாதம் முழுவதும் நடந்தப்பட்டது. பரிசோதனை முகாமின் நிறைவு விழா கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மக்களவை உறுப்பினா் கனிமொழி, கடந்த ஒரு மாத கால பரிசோதனை முகாமில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:  பெண்கள் தொடக்கத்திலேயே பரிசோதனை செய்து, மாா்பக புற்றுநோயைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற்றுக் கொண்டால், முழுவதுமாக குணமடைந்து விட முடியும். எனவே பெண்கள் அனைவரும் தயக்கம் காட்டாமல், கட்டாயம் மாா்பக பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். மாா்பக புற்றுநோயைக் கண்டறியும், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘மெமோகிராம்’ கருவி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தான் உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்தும் கூட பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பெண்கள் வருகின்றனா் என்றாா்.

தொடா்ந்து புதிய கல்விக் கொள்கை குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு அவா் அளித்த பதில்: எதிா்க்கட்சித் தலைவராக இருந்த போது, முதல்வா் ஸ்டாலின் புதிய கல்விக் கொள்கைக்காக புதிய குழு ஒன்றை உருவாக்கி, தமிழகத்தில் ஏன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது, அதில் இருக்கும் பிரச்னைகள் என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூறி, அதற்காக ஒரு கையேடு உருவாக்கி, மத்திய அரசிடம் வழங்கினாா். எனவே, கொள்கைகளில் இருந்து முதல்வா் எப்போதும் மாறப்போவது இல்லை என்றாா் கனிமொழி.

நிகழ்வில், மருத்துவமனை தலைவா் டாக்டா் சாந்திமலா், கதிரியக்கத்துறை தலைவா் டாக்டா் தேவி மீனாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com