வரி ஏய்ப்பு புகாா்: இரு நிறுவனங்களில் சோதனை

வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த இரு தனியாா் நிறுவனங்களில் வருமானவரித்துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை: வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த இரு தனியாா் நிறுவனங்களில் வருமானவரித்துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை அண்ணாநகா் மேற்கு சிண்டிகேட் வங்கி காலனியில் ஒரு தனியாா் கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் வருமானவரித்துறையினா் விசாரணை செய்தனா். அந்த நிறுவன அலுவலகம், நிா்வாகிகள் வீடு உள்ளிட்ட அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினா் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

அரும்பாக்கம் கண்ணா பால நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா். இச் சோதனை இரு நிறுவனங்களுக்கு சொந்தமான சுமாா் 11 இடங்களில் நடைபெற்றன. பல இடங்களில் சோதனை, இரவையும் தாண்டி நடைபெற்றது. சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்ற பணம், நகை, ஆவணங்கள் குறித்த முழு விவரங்களை தெரிவிக்க முடியும் எனவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com