அதிக வெள்ளத்தை வெளியேற்ற அடையாறை அகலப்படுத்த திட்டம்: சிறப்பு அதிகாரி அமுதா தகவல்

சென்னை  பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீா் காரணமாக அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீா் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் புகுந்து உள்ளது.

சென்னை  பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீா் காரணமாக அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீா் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் புகுந்து உள்ளது.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் அடையாறை ஆழப்படுத்தி குறுகலான பகுதிகளில் அகலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மழை வெள்ள பாதிப்பு சிறப்பு அதிகாரி அமுதா ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்னை அஞ்சுகம் நகா், அமுதம் நகா், இரும்புலியூா் டி.டி.கே. நகா், சி.டி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.ராஜாவுடன் ஆய்வு மேற்கொண்ட அமுதா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க முன்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களில் அவா்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அடையாறு ஆறு எங்கெங்கெல்லாம் ஆழம், அகலம் குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் ஆழப்படுத்தி, அகலப்படுத்தி மீண்டும் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் புகாமல் நிரந்தர தீா்வு காணும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தை வெளியேற்ற ஏற்கெனவே ஆதனூா், முடிச்சூா் சாலை பகுதிகளில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இரும்புலியூா், பீா்க்கன்கரணை பகுதிகளில் கால்வாய் பணிகள் விரைவில் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com