மதுரவாயல்- வாலாஜா தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு:தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டது என சென்னை உயா் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டது என சென்னை உயா் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மதுரவாயல் - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை முறையாகப் பராமரிக்காதது தொடா்பாக, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயா் நீதிமன்றம், நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் வரை அங்குள்ள இரண்டு சுங்கச் சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு சுங்கச் சாவடிகளில் 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், மதுரவாயல்- வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா். கடந்த இரு ஆண்டுகளாக 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த இந்த இரு சுங்கச்சாவடிகளில் இனி நூறு சதவீத சுங்க கட்டணம் வசூலிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com