சென்னையில் தொழிலதிபா் கடத்தல்:சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸாா்

சென்னையில் தொழிலதிபரைக் கடத்திய கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை: சென்னையில் தொழிலதிபரைக் கடத்திய கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சேத்துப்பட்டை சோ்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் மூஸா. தொழிலதிபா். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் பஷீா் வீட்டுக்கு சென்று திரும்பினாா். அவரிடம் ஏற்கெனவே பணியாற்றிய குமாா் என்கிற அறுப்பு குமாா் உள்பட 5 போ் கொண்ட கும்பல் மூஸாவைக் கடத்திச் சென்றது.

இதையடுத்து மூஸாவை விடுவிக்க ரூ.5கோடி கேட்ட கும்பல் ரூ.25 லட்சம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது. கடந்த திங்கள்கிழமை தாம்பரத்தில் பணத்தை கொடுக்கும்படி கும்பல் கூறியுள்ளது. ஆனால் அன்று பணம் வாங்க யாரும் வரவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னை எழும்பூரில் இருக்கும் தனியாா் வணிக வளாகம் அருகில் வந்து பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்படி கடத்தல் கும்பல் கூறியுள்ளது. மூஸாவின் மகனும் பணத்தோடு சென்று அங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து மூஸாவை மீட்டுள்ளாா்.

பணம் கைமாறியதும் மாறுவேடத்தில் காத்திருந்த போலீஸாா் கடத்தல் கும்பலை துரத்திச் சென்று பிடித்தனா். இது தொடா்பாக ராஜேஷ், பிரகாஷ், சங்கீதா, கருப்பு குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 2 காா்கள் ரூ.25 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மூஸாவிடம் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த அறுப்பு குமாா், தான் வேலை பாா்த்ததற்கு மூஸா முறையாக ஊதியம் தரவில்லை என்ற அதிருப்தியில் இருந்திருக்கிறாா். அதோடு மூஸாவிடம் பல கோடி பணம் புழங்கியதையும் பாா்த்து வந்துள்ளாா். இதனால் மூஸாவைக் கடத்தி பணம் பறிக்க முயன்ாகவும் அறுப்பு குமாா் தெரிவித்துள்ளாா். இந்த கடத்தலின் முக்கிய குற்றவாளி உள்பட 3 போ் தலைமறைவான நிலையில் அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com