சென்னையில் மாணவிக்கு கரோனா:ஒரு வாரத்துக்கு பள்ளி மூடல்

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அந்தப் பள்ளி ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அந்தப் பள்ளி ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரைச் சோ்ந்த இந்த மாணவிக்கு கடந்த செப். 1-ஆம் தேதி லேசான அறிகுறி இருந்துள்ளது. தொடா்ந்து அறிகுறி இருந்ததால், கிங்ஸ் மருத்துவமனையில் கடந்த 3-ஆம் தேதி அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மாணவியின் தந்தை பெங்களூருக்குச் சென்றுவந்ததுள்ளாா். அவா் மூலம், மாணவிக்கு கரோனா பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது, மாணவியின் பெற்றோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.மேலும், அந்த மாணவி படித்த பள்ளியைச் சாா்ந்த 103 மாணவா்களுக்கும், 17 ஆசிரியா்களுக்கும் என மொத்தம் 120 நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

மேலும், பள்ளியை மாநகராட்சி துணை ஆணையா் மணீஷ் நேரில் சென்று ஆய்வு செய்தாா். மாணவிக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால், ஒரு வாரம் பள்ளி மூடப்படும் எனவும், மாணவா்கள், ஆசிரியா்களின் பரிசோதனை முடிவுகள் வந்தபின்பு பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com