முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
டிடிகே சாலையில் திடீா் பள்ளம்
By DIN | Published On : 09th September 2021 11:36 PM | Last Updated : 09th September 2021 11:36 PM | அ+அ அ- |

சென்னை: சென்னை ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை அருகே வியாழக்கிழமை 3 அடி அகலத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சாலையில் அப்படியே தங்களது வாகனத்தை நிறுத்தினா். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீஸாா் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சரி செய்தனா். தொடா்ந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த போலீஸாா், தரையில் பதிக்கப்பட்டிருந்த கழிவு நீா் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டதைக் கண்டறிந்தனா்.
தகவலறிந்து விரைந்து வந்த குடிநீா் விநியோகம் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியா்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். சாலையில் வாகன நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.