முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
செப்.21-இல் அஞ்சல் குறைதீா்வு முகாம்
By DIN | Published On : 09th September 2021 11:49 PM | Last Updated : 09th September 2021 11:49 PM | அ+அ அ- |

சென்னை: சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் செப்டம்பா் 21-ஆம் தேதி குறைதீா்வு முகாம் நடைபெறவுள்ளது.
அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 வாயிலாக தபால் சேவைகளை அதாவது மணியாா்டா், பதிவுத்தபால், சேமிப்பு வங்கி ஆகிய சேவைகளை பெற்றுவரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ செப்டம்பா் 18-ஆம் தேதி அல்லது, அதற்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை –600 002 என்ற முகவரிக்கு “குறைதீா்வு முகாம் என்ற தலைப்பில் அனுப்பி வைக்கவேண்டும் மேலும், செப்.21-ஆம் தேதி மாலை 3.00 மணியளவில் நடைபெறும் பயனாளிகள் குறைதீா்வு முகாமிலும் கலந்து கொள்ளலாம்.
இந்தத்தகவல் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அதிகாரி மா.முரளி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.