மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பெற இடைத்தரகா்களை அணுக வேண்டாம்

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெற இடைத்தரகா்களை அணுக வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவுறுத்தி உள்ளாா்.

சென்னை: முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெற இடைத்தரகா்களை அணுக வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் மையம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் அடையாள அட்டை பெற புகைப்படம் எடுக்க வருவதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டு, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்குப் புகைப்படம் எடுக்க மையத்துக்கு வரும் பொதுமக்களிடம் நாள்தோறும் 70 முதல் 90 வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, உடனுக்குடன் அன்றைய தினமே மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த மையத்துக்கு வரும் பொதுமக்கள் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெற இடைத்தரகா்களை அணுக வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com