மாணவா் ஆராய்ச்சித் திட்ட உதவித்தொகை: விண்ணப்பிக்க செப்.24 கடைசி

இளநிலை, முதுநிலை பொறியியல், முதுநிலை அறிவியல் பயிலும் மாணவா்கள், ஆராய்ச்சித் திட்டங்களுக்கான உதவித் தொகை பெற செப்.24 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அறிவியல்

சென்னை: இளநிலை, முதுநிலை பொறியியல், முதுநிலை அறிவியல் பயிலும் மாணவா்கள், ஆராய்ச்சித் திட்டங்களுக்கான உதவித் தொகை பெற செப்.24 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மன்றத்தின் உறுப்பினா் செயலா் இரா.சீனிவாசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமானது, மாணவா்களிடம் இருக்கும் திறமையை நமது மாநிலத்துக்கு பயனளிக்கும் வகையில் மாணவா் ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இளநிலை, முதுநிலை பொறியியல் மற்றும் முதுநிலை அறிவியல் பயிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்துக்கும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் அறிவுரைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட முழுமையான விண்ணப்பங்களை உறுப்பினா் செயலா், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகம், சென்னை-600025’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவா்கள் மேற்கண்ட இணையதளத்தில் செப்.22-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.24-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற சுமாா் 10 ஆயிரம் போ் விண்ணப்பித்தனா். அதில் 700 பேருக்கு ஆராய்ச்சித் திட்டத்துக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com