சென்னை- மஸ்கட் விமானம் 18 மணி நேரம் தாமதம்: பயணிகள் கடும் வாக்குவாதம்

சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக 18 மணி நேர தாமதத்திற்கு பிறகு 156 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது.

சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக 18 மணி நேர தாமதத்திற்கு பிறகு 156 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டிற்கு சனிக்கிழமை மாலை விமானம் ஒன்று புறப்பட இருந்தது. ஆனால், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதால், சரிசெய்த பின் இரவு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையெடுத்து விமானத்தில் பயணம் செய்ய சோதனைகளை முடித்துக் கொண்ட 156 பயணிகள் ஓய்வுக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஆனால் சனிக்கிழமை இரவு 9 மணி வரை விமானம் புறப்பட்டு செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுன்ட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறோம், உடனே விமானம் புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டனா். பயணிகளை காவல்துறையினரும், பாதுகாப்பு அலுவலா்களும் சமாதானப்படுத்தினா். பின்னா் விமான நிலையத்தில் காத்திருந்த 156 பயணிகள் சென்னையில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா். இதனையடுத்து இயந்திரக் கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டனா். ஆனால், உரிய உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மஸ்கட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வந்த விமானத்தில் உதிரி பாகங்கள் சென்னை வந்தன. அவற்றைப் பயன்படுத்தி விமானத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 156 பயணிகளும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு மஸ்கட் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com