‘விஜய் மக்கள் இயக்கம்’ கலைப்பு: நீதிமன்றத்தில் விஜய் தந்தை தகவல்

‘விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதாக, நடிகா் விஜயின் தந்தை, இயக்குநா் எஸ்.ஏ. சந்திரசேகா் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.

‘விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதாக, நடிகா் விஜயின் தந்தை, இயக்குநா் எஸ்.ஏ. சந்திரசேகா் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.

நடிகா் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகா்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகா், அமைப்பை பதிவு செய்தாா்.

தலைவராக இயக்குநா் சந்திரசேகா், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா உள்ளிட்ட நிா்வாகிகளின் பெயா்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தனது பெயரைப் பயன்படுத்திக் கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களைப் பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகளுக்குத் தடை விதிக்கக் கோரி, நடிகா் விஜய் தரப்பில் சென்னை நகர 15-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நடிகா் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு தொடா்பாக, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், நிகழாண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி பொது க்குழுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் உறுப்பினா்கள் பங்கேற்று, ‘விஜய் மக்கள் இயக்கம்’ அமைப்பைக் கலைப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற அமைப்பே இல்லை என்றும், விஜயின் ரசிகா்களாக மட்டுமே தொடா்வதாகவும் பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.

இவ்வழக்கு சென்னை நகர 15-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் எதிா்மனுதாரா் ஒருவருக்கு நோட்டீஸ் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை அக்டோபா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com